எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கிளென் பாக்கியம்கட்டுரைகள்

கிறிஸ்துவில் தோழர்கள்

வயதுவந்தோருக்கான வளர்ச்சி பற்றிய ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் ஆய்வு என்பது பல பத்தாண்டுகள் நீடித்த திட்டமாகும், இதன் விளைவாக ஆரோக்கியமான உறவுகளின் முக்கியத்துவத்தைப் பற்றி அதிகம் புரிந்துகொள்ள முடிந்தது. 2-ஆம் ஆண்டு படிக்கும் 268 பேர் கொண்ட மாணவர்களின் குழுவுடன் 1930-களில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தொடங்கிய ஆராய்ச்சி பின்னர் மேலும் 456 மற்றவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்பாளர்களுடன் நேர்காணல்களை நடத்தி, சில வருடங்களுக்கு ஒருமுறை அவர்களின் மருத்துவ பதிவுகளை அலசி ஆராய்ந்தனர். அவர்களின் நெருங்கிய உறவுகளே அவர்களின் மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை யூகிப்பதில் மிகப்பெரிய காரணி என்பதை அவர்கள் கண்டறிந்தனர். சரியான நபர்களால் நாம் சூழப்பட்டிருந்தால், ஆழ்ந்த மகிழ்ச்சியின் உணர்வை நாம் அனுபவிப்போம்.

பிலிப்பியர் 1-ல் அப்போஸ்தனாகிய பவுல் விவரிக்கிறதை இது பிரதிபலிக்கிறது. சிறையிலிருந்து அவர் எழுதுகையில், பவுலால் உதவ முடியாது எனினும் ஒவ்வொரு முறையும் அவர் அவர்களை நினைக்கிற பொழுதெல்லாம் அவர்களுக்காக தேவனை ஸ்தோத்தரித்து, "சந்தோஷத்தோடே" விண்ணப்பம்பண்ணுகிறார் என்று அவரது நண்பர்களிடம் கூறுகிறார் (வச. 4). ஆனால் இவர்கள் சாதாரண நண்பர்கள் அல்ல; இவர்கள் இயேசுவினுள் சகோதர சகோதரிகள், அவர்கள் “தேவனின் கிருபையில் பங்குள்ளவர்கள்”, பவுலுடன் சுவிசேஷ ஊழியத்தில் பங்காளிகள் (வச. 7). அவர்களின் உறவு பகிர்வினாலும் மற்றும் பரஸ்பரத்தினாலும் உருவான ஒன்று – தேவனின் அன்பினாலும் மற்றும் சுவிசேஷத்தினாலும் வடிவமைக்கப்பட்ட ஒரு உண்மையான ஐக்கியம்.

ஆம், நண்பர்கள் முக்கியம் தான், எனினும் கிறிஸ்துவுக்குள் உள்ள சகதோழர்கள் ஒரு உண்மையான மற்றும் ஆழ்ந்த மகிழ்ச்சியின் வினையூக்கிகள். வேறு எதை விடவும் தேவனின் கிருபையே நம்மை ஒன்றாக பிணைக்க முடியும், மேலும் வாழ்க்கையின் எந்த இருள் சூழ்ந்த காலங்களிலும் கூட இந்த பிணைப்பினால் வரும் மகிழ்ச்சி நீடிக்கும்.

இந்த விஷயங்களை பயிற்சி செய்யுங்கள்

நான் என் மகனுக்கு கணக்கு வீட்டுப்பாடத்தில் உதவி செய்தபோதுதான், அதே பாடத்தில் எழும் சிக்கலான கணக்குகளை செய்வதில் அவனுக்கு ஆர்வம் குறைவாக உள்ளது என்பது வெளிப்பட்டது. “நான் அதை செய்து முடித்துவிட்டேன்”, என்று அவன் என்னிடம் வலியுறுத்திக்கொண்டே இருந்தான், அப்படி சொன்னால் நான் அவனை எல்ல வீட்டுப்பாடத்தையும் செய்யசொல்லி வற்புறுத்தமாட்டேன் என்று நம்பி அப்படி சொன்னான். நடைமுறையில் அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை நாம் கற்றுக் கொள்ளும் வரை ஒரு கருத்து ஒரு கருத்து மட்டுமே என்று நான் அவனுக்கு கனிவாக விளக்கினேன்.

பவுல் கடைப்பிடிப்பதை குறித்து பிலிப்பியில் உள்ள தனது நண்பர்களுக்கு எழுதுகிறார். “நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்” (பிலிப்பியர் 4:9). அவர் ஐந்து விஷயங்களைக் குறிப்பிடுகிறார்: ஒப்புரவாவது - அவர் எயோதியாளும், சிந்திகேயாளும் ஒப்புரவாகும்படி வலியுறுத்துகிறார் (வ. 2-3); சந்தோஷம் - அவர் தனது வாசகர்களை பக்குவப்படும்படி நினைப்பூட்டுகிறார் (வ. 4); சாந்தகுணம் - உலகத்துடனான அவர்களின் உறவில் வேலைசெய்யமாறு அவர் அவர்களை வலியுறுத்துகிறார் (வ. 5); ஜெபம் - அவர் தனிப்பட்ட முறையிலும் மற்றும் எழுத்திலும் அவர்களுக்கு முன்மாதிரியாக இருந்ததுபோல (வ. 6-7); சிந்தை - அவர் சிறையிலும் வெளிப்படுத்திகாட்டியபடி (வ. 8). ஒப்புரவாகுதல், சந்தோஷம், சாந்தகுணம், ஜெபம் மற்றும் சிந்தை - இயேசுவில் விசுவாசிகளாக வாழ அழைக்கப்பட்ட விஷயங்கள் இவை பக்குவப்பட மற்றெந்த பழக்கத்தையும் போல இந்த நற்பண்புகளும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

பவுல் ஏற்கனவே பிலிப்பியருக்கு சொன்னது போல சுவிசேஷத்தின் நற்செய்தி ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார் (2:13). நாம் நம் சொந்த வல்லமையில் ஒருபோதும் செயல்படுவதில்லை. தேவனே நமக்கு தேவையானதை போஷிக்கிறார் (4:19).

நீங்களே இல்லை

1859ம் ஆண்டு கோடையில், நயாகரா நீர்வீழ்ச்சியை ஒரு இறுக்கமான பாதையில் கடக்கும் முதல் நபராக மான்சியூர் சார்லஸ் ப்ளாண்டின் ஆனார் - இது அவர் நூற்றுக்கணக்கான முறை செய்யப் போகிறது. ஒருமுறை அவர் தனது மேலாளர் ஹாரி கோல்கார்டுடன் தனது முதுகில் ஏற்றிக் கொண்டு செய்தார். ப்ளாண்டின் கோல்கார்டுக்கு இந்த அறிவுறுத்தல்களைக் கொடுத்தார்: “பாருங்கள், ஹாரி… நீங்கள் இனி கோல்கார்ட் இல்லை, நீங்கள் ப்ளாண்டின்… நான் சாய்ந்து ஆடினால், என்னுடன் சேர்ந்து கொள்ளுங்கள். உங்களை நீங்களே சமநிலைப்படுத்த முயற்சிக்க வேண்டாம். நீங்கள் செய்தால், நாம் இருவரும் நமது மரணத்திற்கு செல்வோம்.”

பவுல், சாராம்சத்தில், கலாத்திய விசுவாசிகளிடம் கூறினார்: கிறிஸ்துவை விசுவாசிப்பதைத் தவிர, தேவனுக்கு பிரியமான ஒரு வாழ்க்கையை நீங்கள் வாழ முடியாது. ஆனால் இங்கே ஒரு நல்ல செய்தி - நீங்கள் செய்ய வேண்டியதில்லை! தேவனிடம் நம் வழியை சம்பாதிக்க எந்த முயற்சியும் அதை குறைக்காது. ஆகவே, நம்முடைய இரட்சிப்பில் நாம் செயலற்றவர்களா? இல்லை! கிறிஸ்துவிடம் ஒட்டிக்கொள்வதே நமது அழைப்பு. இயேசுவிடம் ஒட்டிக்கொள்வது என்பது பழைய, சுதந்திரமான வாழ்க்கை முறையை கொல்வது; நாம் இறந்துவிட்டோம் போல. எனினும், நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன் (கலா. 2:20).

 இன்று நாம் எங்கு இறுக்கமாக நடக்க முயற்சிக்கிறோம்? தண்ணீடம் கயிற்றில் நடந்து செல்ல தேவன் நம்மை அழைக்கவில்லை; அவருடன் ஒட்டிக்கொண்டு இந்த வாழ்க்கையை அவருடன் நடக்க அவர் நம்மை அழைத்தார்.

உட்புற பிரச்சனைகள்

சில வருடங்களுக்கு முன்பு எனது வீட்டில் மேல் மாடியில் மரம் கொத்தி பறவை ஒன்று கொத்திக் கொண்டே இருந்தது அதை நாம் அதிகமாக பொருட்படுத்தவில்லை அது எங்கள் வீட்டு வெளியே என்று எண்ணிக் கொண்டிருந்தோம் ஆனால் பல நாட்கள் இது நானும் என் மகனும் வீட்டு மேலே சென்று பார்க்கும் போது அந்தப் பறவை வீட்டினுள்ளே வைத்திருந்தது நினைத்ததைவிட மிகவும் மோசமாக இருந்தது இயேசு வந்தபோது அங்குள்ள மக்கள் அவர்களுடைய பிரச்சினைகளை அவர் போக்குவார் என்று எதிர்பார்த்தார்கள் அவர்களிடம் இருந்து விடுதலை வாங்கித் தருவார் என்று எண்ணினார்கள் அனைத்து மக்களும் ஆரவாரத்துடன் தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் உன்னதத்தில் ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள் மத்தேயு 21:9. இதற்காகத்தான் அந்த மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் தேவன் நியமித்த ராஜா இறுதியில் வந்து விட்டார் தேவராஜா அனைத்தையும் புதிதாய் மாற்றுவார் ஆனால் வெளியே இருந்து தானே ஆரம்பிப்பார் கேள்விக்குறி ஆனால் இயேசுவோ தேவாலயத்தில் காற்றுப் அவர்களிடம் இருந்து ஆரம்பித்தார் அவர் வீட்டில் உட்புறத்திலிருந்து சுத்தம் செய்ய ஆரம்பித்தார்

நடக்கும் போது அவர் காரியங்களை சரிப்படுத்த வருகிறார் நீங்கும்படி சுத்திகரித்துக் நம் ராஜாவாகிய இயேசு கிறிஸ்து நம்மிடம் நிபந்தனையற்ற விடுதலை எதிர்பார்க்கிறார் அப்போது நான் கடந்து செல்வோம்

கண்களை ஏறெடுத்து பாருங்கள்

ஒரு நாள் காலை பொழதில் மலையேறும் போது, அதிக பனியின் நிமித்தம், மேகம் முழுவதும் என்னை சூழந்து கொண்டது. சில மீட்டர்கள் மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு நிமிடமும் ஒரு மனிநேம் போல் நீட்டப்பட்டது. அதினால் எனது மனநிலை மிகவும் தாக்கத்திர்க்குள்ளானது. ஆனால், பின்னர் மதிய வேலையில் சொஞ்சமாக பனி மேகம் கலைந்து என் முன் இருக்கும் கம்பீரமான மலைகள் தெரிந்தது என்னை சுற்றி இருக்கும் சிகரங்களை என்னால் பார்க்க முடிந்தது. இவைகளை கண்டபோது என்னை அறியாமலே என் முகத்தில் சந்தோஷம் மலர்ந்தது. இதைகுறித்து சிந்திக்கும்போது, சில வேலைகளிள் எப்படி வெளிப்படை நிகழ்வுகள் நம் ஆவிக்குரிய பார்வையை பாதிக்கிறது என்று சங்கீதக்காரன் நமக்கு நினைப்புட்டுவது போல் “எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்” என்பதை நினைவில் வைக்கவும் சில வேலைகளிள் நம் கண்களை ஏறெடுத்து பார்த்தால் மாத்திரம் போதும்.
தன் உதவி எங்கு இருந்து வருகிறது என்று சங்கீதக்காரன் யோசித்துகொண்டிருந்தான். தன்னை சுற்றி இறுக்கும் மலைகளில் உள்ள பலிபீடத்தில் இருந்தா? அல்லது சங்கீதக்காரன் தன் முன் வீற்றிருக்கும் சீயோன் மலையில் வீற்றிருக்கும் தேவாலயத்தை பார்த்து வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவனிடத்தில் இருந்தா என்று? எப்படி பார்தாலும் அவரை தொழுது கொள்ளுட்படி நம் கண்களை ஏறெடுத்து பார்க்க வேண்டும். எப்பேற்ப்பட்ட ச்ந்தர்பங்கள் வழியாக நாம் கடந்து சென்றாலும், நம் பரச்சனைகள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அவையனைத்திற்கும் மேலாக இருக்கும் நம்மை படைத்த நம் மீட்பதை நோக்கி நம் கண்களை ஏறெடுத்து பார்போம். அவரே நம் பெயர் சொல்லி அழைக்கும் தேவனாக இருக்கிறார். இன்றும் என்றும் அவரே நம் போக்கையும் வரத்தையும் காப்பார்.

இரவில் ஒரு பாடல்

சூரியன் அஸ்தமித்து நீண்ட நேரத்திற்குப் பிறகு எங்களுக்கு மின் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டது. என்னுடைய இரண்டு இளைய பிள்ளைகள் என்னோடே இருந்தார்கள், மற்றும் இதுதான் முதல் முறை அவர்கள் மின்தடையை அனுபவிக்கிறார்கள். மின் தடைப் பற்றி மின்வாரி நிறுவனம் அறிந்திருக்கிறதா என்று சரிபார்த்த பிறகு, சில மெழுகுவர்த்திகளை ஏற்றி நானும் என் குழந்தைகளும் சமையலறையில் ஒளிர்கின்ற சுடர்களைச் சுற்றி அமர்ந்திருந்தோம். அவர்கள் பதற்றமாகவும் அமைதியற்றவர்களாகவும் தோன்றினதால் நாங்கள் பாட ஆரம்பித்தோம். விரைவில் அவர்களுடைய முகத்தில் இருந்த சோகமான தோற்றம், புன்னகையாக மாறியது. சில நேரங்களில் நம்முடைய இருண்ட தருணங்களில் நமக்கு பாடல் தேவைப்படுகிறது.

தேவனுடைய பிள்ளைகள் நாடுகடத்தப்பட்டதிலிருந்து, தரிசு நிலமாய் மாறிப்போன தங்கள் தாய்நாட்டிற்கு திரும்பி வந்தப் போது 103ம் சங்கீதம் ஜெபமாகவோ அல்லது பாடலாகவோ ஏறெடுக்கப்பட்டது. அந்த நெருக்கடியின் தருணத்தில் அவர்கள் பாடவேண்டியிருந்தது. ஆனால் ஏதோ ஒரு பாடல் அல்ல, தேவன் யார் என்றும் அவர் என்ன செய்கிறார் என்றும் பாடவேண்டியிருந்தது. அவர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர் என்பதை நினைவுகூற 103ம் சங்கீதம் உதவுகிறது (வச. 8). ஒருவேளை நம் பாவத்தின் தீர்ப்பு இன்னும் நம் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கிறது என்று நாம் நினைத்தால், தேவன் கோபமடையவில்லை, அவர் மன்னித்துவிட்டார், அவர் இரக்கமுள்ளவர் என்று சங்கீதம் நமக்கு அறிவிக்கிறது. நம்முடைய வாழ்க்கையில் இருண்ட இரவுகளில் நாம் பாடுவதற்கு அவைகளே நல்ல விஷயங்கள்.

ஒரு இருண்ட மற்றும் கடினதான இடத்தில் நீங்கள் இருப்பதாக காணலாம். தேவன் உண்மையாகவே நல்லவரா என்று அவருடைய அன்பை கேள்விக்குரியாக்குகிறீர்களா? அப்படியானால், ஜெபித்து அன்பு நிறைந்தவரைப் பாடுங்கள்.

உத்தம ஊழியக்காரன்

கி.மு. 27 ல், ரோமானிய ஆட்சியாளரான ஆக்டேவியன், தனது அதிகாரங்களை ஒப்படைக்க செனட் முன் வந்தார். அவர் ஒரு உள்நாட்டுப் போரை வென்று, உலகின் அந்த பிராந்தியத்தின் ஒரே ஆட்சியாளராகி ஒரு பேரரசரைப் போல செயல்பட்டு வந்தார். ஆயினும், அப்படிப்பட்ட அதிகாரம் சந்தேகத்துக்குரியதாக பார்க்கப்பட்டதாக அவர் அறிந்திருந்தார். அதனால், ஆக்டேவியன் தனது அதிகாரங்களை செனட்டுக்கு முன்பாக ஒப்படைத்து, நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரியாக செயல்பட சாபதமெடுத்தார். அவர்களின் பதில் ? ரோமானிய செனட், ஆட்சியாளரை ஒரு குடிமைக் கிரீடத்தால் முடிசூட்டி, ரோமானிய மக்களின் சேவைக்காரன் என்று பெயரிட்டு கௌரவித்தது. அவருக்கு அகஸ்டஸ் - “மகா பெரியவர்” – என்ற பெயரும் வழங்கப்பட்டது.

இயேசு தன்னை வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்ததைக் குறித்து பவுல் எழுதுகிறார். அகஸ்டஸ் தனது அதிகாரங்களை ஒப்படைப்பதைப் போலவே செயல்பட்டார். ஆனால் அதை தனது சொந்த லாபத்திற்காக செய்துக் கொண்டிருந்தார். இயேசு “ மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரயபரியந்தமும் கீழ்படிந்தவராகித், தம்மைத் தாமே தாழ்த்தினார். (பிலிப்பியர் 2:8). ரோமானிய சிலுவையில் மரணம் என்பது அவமானம் மற்றும் அவமானத்தின் மோசமான வடிவமாகும்.

இன்று மக்கள் “ஊழியத் தலைமையை” ஒரு நல்லொழுக்கமாகப் புகழ்வதற்கு காரணம் இயேசுவே. தாழ்மை ஒரு கிரேக்க மற்றும் ரோமானிய நல்லொழுக்கம் அல்ல. இயேசு நமக்காக சிலுவையில்

மரித்ததால், அவரே உண்மையான ஊழியக்காரன். அவரே உண்மையான இரட்சகர்.

நம்மை இரட்சிக்கும்படியாக கிறிஸ்து ஒரு அடிமையானார். உண்மையிலேயே மிகப்பெரிய பரிசாகிய, இரட்சிப்பு மற்றும் நித்திய ஜீவன், இவைகளை நாம் பெற்றுக்கொள்ளும்படியாக அவர் “தம்மைத் தாமே வெறுமையாக்கினார்”.

தவறான நம்பிக்கை

சில வருடங்களுக்கு முன்பு எனது மருத்துவர் என்னுடைய உடலின் நிலையை பார்த்து நான் அனுதினமும் உடற்பயிற்சி செய்து எனது உணவு முறையை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது வார்த்தைகளின்படி நான் தொடர்ந்து பின்பற்றி வந்தேன். அதின் பலனாக  எனது இடையும் கொழுப்புச்சத்தும் நன்றாக குறைந்து வந்தது. ஆனால்  அதோடு கூட எனது சுய பெருமையும் அதிகரித்தது. மற்றவர்களுடைய சாப்பாடு குறைபாடுகளை பார்த்து அவர்களை தாழ்வாக எண்ணத் தொடங்கினேன்.

நற்பலனை தரும் ஒரு காரியத்தை நாம் கற்றுக் கொண்டதின் நிமித்தம் நம்மை அறியாமலே மற்றவர்களை குறைவாக சிந்திக்க தொடங்குகிறோம். இதினிமித்தம் நம்மை குறித்து பெருமை படுகிறோம். மனித இயல்பானது நாம் நினைத்ததை நன்மையென்றும், அதை நியாயப்படுத்துவதும் வழக்கம் என்று தோன்றுகிறது .

பிலிபியர்களுக்கு பவுல் இந்த செயலை குறித்து எச்சரித்திருக்கிறார். அங்குள்ள பலர் தங்கள் கலாச்சாரத்தை குறித்தும், அவர்கள் மதத்தை குறித்தும், ஜாதியை குறித்தும் பெருமை பாராட்டி கொண்டிருந்தார்கள். பவுலோ தனக்கு பெருமை பாராட்ட பல விஷயங்கள் உண்டென்று "மாம்சத்தின் மேல் நம்பிக்கை வைக்க வேண்டுமானால் நானும் வைக்கலாம் "(வ. 4). எனினும் தேவனை அறிகிற அறிவுக்கு ஒப்பாக குடும்ப பெருமைகளையும் பாரம்பரியத்தையும் அவர் குப்பை என்று எண்ணினார். இயேசுவே நமக்கு விடுதலையும், மீட்பும் அவரைப்போல் மாறவும் பெலன் தருகிறார். எந்த பெருமையும் நமக்கு தேவையில்லை.

பெருமை தவறானது, அதிலும் பொய்யான காரியத்தின் மேல் பெருமை கொள்வதும், நம்பிக்கை வைப்பது அதை விட பரிதபிக்கக்கூடியது. தவறான நம்பிக்கையிலிருந்து வெளியே வந்து நமக்காய் தம்மை கொடுத்த தேவனிடம் நாம் ஐக்கியம் கொள்வோம்.

மெதுவாக ஆனால் உறுதியாக

என் நண்பன் ஒருவனை எதேர்ச்சியாக சந்தித்தபோது, அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதை பற்றி அவன் கூறியது சற்றும் நம்பும்படியாகவே இல்லை. ஆனால்  இந்த உரையாடல் நடந்து ஒரு சில மாதங்களுக்குள் அந்த நண்பனின் இசைக் குழு மிக பிரசித்தம் பெற்றது. வானொலியிலும் தொலைக்காட்சியிலும் அவனுடைய புகழ் பிரம்மாண்டம் அடைந்தது.

நாமும் கூட  பெரிய, வியத்தகு, குறுகிய நேரத்தில் பிரம்மாண்டமாக இருக்கும்  முக்கியத்துவத்தையும்  வெற்றியையும் குறி வைக்கலாம். ஆனால், கடுகையும் புளித்த மாவையும்  பற்றிய உவமைகள், ராஜ்ஜியத்தின்வழியை (பூமியில் தேவனுடைய ஆளுகை) ஒரு சிறிய மறைந்திருக்கும் முக்கியமற்று மெதுவாய் படிப்படியாய் வளரும் பொருட்களுடன் ஒப்பிடுகிறது.

ராஜ்ஜியம் அதன் அரசனை போன்றது. கிறிஸ்துவின் பணி  பூமிக்குள் புதைக்கப்படும்  ஒரு விதை போன்று அவ்ருடைய வாழ்க்கையில் உச்சநிலையை அடைந்தது;  ஒளிந்திருக்கும் புள்ளிப்புத் தன்மையை போன்று. ஆனாலும் அவர் எழுந்தார். புழுதியை உடைத்துக்கொண்டு எழும்பும் ஒரு  மரத்தை போல, சூடு அதிகமாகும்போது  மாவு எழுப்புவதை போல. அவர் எழுந்தார்.

நாமும் அவரைப் போல தொடர்ந்து ஊடுருவும் வாழ்வை  வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். முடிவெடுக்கும் காரியங்களை நம் கைகளிலேயே எடுத்துக் கொள்ளவும், அதிகாரத்தை பிடித்துக்கொள்ளவும், உலகத்தில்  நாம் செய்யும் செயல்களின் பலன்களை நியாயப்படுத்துவதற்கும் எலும்பும் சோதனைகளை எதிர்ப்பதற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம். அதன் பலன் “ஆகாயத்துப்பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாவதும்” (மத்தேயு 13:32), புளித்த மாவு ரொட்டி ஆகி அனேகரை போஷிப்பதும், கிறிஸ்துவின் வேலை; நமதல்ல.